தமிழ்நாடு

திருத்தணி முருகன் கோவிலில் ஒரு மாதத்தில் ரூ.1½ கோடி உண்டியல் வசூல்

Published On 2023-09-15 06:34 GMT   |   Update On 2023-09-15 06:34 GMT
  • தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.
  • கோவிலில் உள்ள உண்டியல்கள் ஒரு மாதத்துக்கு பின்னர் தேவர் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

திருத்தணி:

திருத்தணி முருகன் கோவில் 5-ம் படை வீடாக உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில் கோவிலில் உள்ள உண்டியல்கள் ஒரு மாதத்துக்கு பின்னர் தேவர் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மொத்தம் ரூ.1கோடியே 55லட்சத்து 56 ஆயிரத்து 4 ரொக்கம், தங்கம் 960 கிராம், வெள்ளி 11 கிலோ, காணிக்கையாக கிடைத்து இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News