தமிழ்நாடு

திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1¾ கோடி உண்டியல் வசூல்- 964 கிராம் தங்கமும் கிடைத்தது

Published On 2023-04-14 12:06 GMT   |   Update On 2023-04-14 12:06 GMT
  • கிருத்திகை நாட்களில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற குவிவது வழக்கம்.
  • திருத்தணி முருகன் கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது.

திருத்தணி:

திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழுகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இதே போல் கிருத்திகை நாட்களில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற குவிவது வழக்கம்.

இந்நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது. மலைக் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் கோயில் ஊழியர்கள் இதில் ஈடுபட்ட னர்.

கடந்த 44 நாட்களில் ரூ.1 கோடியே 73 லட்சத்து 71 ஆயிரத்து 106 உண்டியல் பணம் காணிக்கையாக கிடைத்து இருந்தது. ராஜ கோபுரம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு வைக்கப்பட்டிருந்த திருப்பணி உண்டியலில் ரூ.15 லட்சத்து 21 ஆயிரத்து 194 இருந்தது.

மொத்தம் ரூ. 1 கோடியே 88 லட்சத்து 92 ஆயிரத்து 300 ரொக்க பணமும், 964 கிராம் தங்கம், 14 ஆயிரத்து 131 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைத்து இருப்பதாக திருத்தணி கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News