தமிழ்நாடு

லஞ்ச புகார் எதிரொலி - தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் தற்காலிக பணியிடை நீக்கம்

Published On 2023-07-30 14:33 GMT   |   Update On 2023-07-30 14:33 GMT
  • மாரிச்சாமி மீனாட்சி சுந்தரத்திற்கு லஞ்சம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
  • இதனால் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேனி:

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களின் உணவு தேவைக்காக மருத்துவமனை வளாகத்தில் கேன்டீன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கேன்டீன்களில் உள்ள குடிநீர் குழாய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேன்டீன் நடத்தி வரும் மாரிச்சாமி என்பவர் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். அப்போது குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டுமானால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேன்டீன் அமைத்துள்ள மாரிச்சாமி, மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு லஞ்சம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்நிலையில், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உணவக உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் மீனாட்சி சுந்தரம்மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மேலும் மீனாட்சி சுந்தரம் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News