தமிழ்நாடு செய்திகள்

குஷ்பு, ரஜினி, மோடி வரிசையில் அயலான்.. சேலத்தில் ஏலியனுக்கு கோவில் கட்டி வழிபடும் நபர்

Published On 2024-08-02 08:30 IST   |   Update On 2024-08-02 08:30:00 IST
  • இந்த கோவிலுக்கு தினமும் பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
  • தற்போது குறைந்த அளவு பூஜை நடைபெறுகிறது.

சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரில் லோகநாதன் என்பவர் ஏலியன் (வேற்றுகிரகவாசி) கோவில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார். ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு தினமும் பக்தர்களும் வந்து செல்கின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த கோவிலை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கோவில் சித்தர் பாக்யா என்று அழைக்கப்படும் லோகநாதனின் குருநாதர் சித்தர் பாக்யா ஜீவசமமாதி அருகே ஏலியன் சித்தர், அகத்திய முனிவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை எங்கும் ஏலியன் சித்தர் இல்லை என்றும் இங்கு தான் உள்ளது என லோகநாதன் தெரிவித்தார். தற்போது கோவிலில் திருப்பணி நடைபெற்று வருவதால் குறைந்த அளவு பூஜை நடைபெறுவதாகவும், கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அனைத்து வித பூஜைகளும் செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Tags:    

Similar News