தமிழ்நாடு செய்திகள்

கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் கழிவறையில் வாலிபர் தற்கொலை

Published On 2023-11-22 10:51 IST   |   Update On 2023-11-22 11:10:00 IST
  • போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ரெயில் பெட்டியில் ஏறி கழிவறை கதவை உடைத்தனர்.
  • வாலிபர் பெங்களுருக்கு வீட்டு வேலைக்காக நண்பர்களுடன் வந்துள்ளார்.

வேலூர்:

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து பெங்களூர் செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் வழியாக புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையம் அருகே வந்தபோது எஸ்-8 பெட்டியில் இருந்த பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றார். அவர் கழிவறையை உட்புறமாக பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாக கழிவறை பூட்டப்பட்டிருந்ததால் பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்கள் கதவைத் தட்டி உள்ளே யார் இருக்கிறார்கள் என சத்தமிட்டனர். ஆனால் உள்ளே இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இதனால் பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

அதற்குள் ரெயில் காட்பாடி வந்தது. அங்கிருந்த ரெயில்வே போலீசாரிடம் பயணிகள் இது குறித்து தெரிவித்தனர். போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ரெயில் பெட்டியில் ஏறி கழிவறை கதவை உடைத்தனர்.

அங்கு வாலிபர் ஒருவர் பிளாஸ்டிக் கயிறால் தூக்கட்டு இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் நேபாளத்தை சேர்ந்த வாலிபர் சந்திரஜித் என்பதும் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

வாலிபர் பெங்களுருக்கு வீட்டு வேலைக்காக நண்பர்களுடன் வந்துள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடியில் 15 நிமிடத்திற்கு மேல் நின்றது. ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News