தமிழ்நாடு
உடன்குடி- செட்டியாபத்து சாலையில் உள்ள பனை மரத்தில் உள்ள காய்ந்த ஓலைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ள காட்சி.

உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கு தயாராகும் தொழிலாளர்கள்

Published On 2023-02-21 06:30 GMT   |   Update On 2023-02-21 06:30 GMT
  • உடன்குடி வட்டாரபகுதியில் உற்பத்தியாகும் கருப்பட்டிக்கு தனி மவுசுஉண்டு.
  • கருப்பட்டி என்று ஊர் பெயரோடு தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று விற்பனையாகும்.

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டாரபகுதியில் உற்பத்தியாகும் கருப்பட்டிக்கு தனி மவுசுஉண்டு. உடன்குடி கருப்பட்டி என்று ஊர் பெயரோடு தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று விற்பனையாகும்.

இந்த கருப்பட்டி ஒவ்வொரு வருடமும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் உற்பத்தியாகும். பனங்கற்கண்டு, வெள்ளை நிற புட்டு கருப்பட்டி இப்படி எல்லாம் தயாரிப்பார்கள். தற்போது பனைமரம் ஏரி இறங்குவதற்கு வசதியாக அந்த மரத்தில் உள்ள தும்புகள், காய்ந்த ஓலைகள், தேவையற்றபனைமரமட்டைகள் ஆகிய வற்றை அப்புறப்படுத்தி, பதனீர் தரும் பாளைஎந்த இடையூறும் இல்லாமல் வருவதற்காக இந்த ஆரம்பகட்ட பணிகளை தொடங்குவார்கள்.

இப்போது அந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து உற்பத்தியாளர் ஒருவர் கூறும்போது, இந்த வருடம் வருகின்ற மார்ச் மாதம் புதிய கருப்பட்டி உற்பத்தியாகி சந்தைக்கு விற்பனைக்கு வந்து விடும் என்றார்.

Tags:    

Similar News