தமிழ்நாடு

ஓ.பன்னீர் செல்வம் குறித்த உண்மைகளை தெரிவித்தால் அவர் வெளியே வர முடியாது- ஆர்.பி.உதயகுமார்

Published On 2022-07-17 05:21 GMT   |   Update On 2022-07-17 05:21 GMT
  • மதுரை அரசு சட்டக்கல்லூரியில் நான் பயின்றபோது ஜெயலலிதாவிற்காக செமஸ்டர் தேர்வு எழுதாமல் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றேன்.
  • நான் சொத்து சேர்த்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் மிரட்டி பார்க்க வேண்டாம்.

மதுரை:

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை அரசு சட்டக்கல்லூரியில் நான் பயின்றபோது ஜெயலலிதாவிற்காக செமஸ்டர் தேர்வு எழுதாமல் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றேன். இது ஜெயலலிதாவின் கவனத்திற்கு சென்ற போது எனக்கு மாணவர் அணிச் செயலாளர் பதவி வழங்கினார்.

தொடர்ந்து இந்த இயக்கத்தின் 50 ஆண்டுகால விழா வரலாற்றில் ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டு மாணவரணி செயலாளர், இளைஞர் அணி செயலாளர், பேரவை செயலாளர் என்று 3 அணிகளுக்கும் சிறப்பாக பணியாற்றிய அ.தி.மு.க. தொண்டன் என்ற பெருமையை எனக்கு தந்தவர் ஜெயலலிதா.

நான் தூய தொண்டாக இருந்து உழைத்து வருகிறேன். ஓ.பி.எஸ்.யின் வரலாறும், என் வரலாறும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும். நான் சொத்து சேர்த்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் மிரட்டி பார்க்க வேண்டாம். திறந்த கதவோடு எத்தனை சோதனைக்கும் நான் தயாராக உள்ளேன்.

ஓ.பி.எஸ். வீட்டிலும், எனது வீட்டிலும் சொத்து குவிப்பு குறித்து லஞ்ச ஓழிப்பு துறை ஓரே நேரத்தில் சோதனை நடத்தி எனது வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கண்டறியப்பட்டால் நான் பொது வாழ்க்கையிலிருந்து விலகிவிடுறேன். அவர் சொத்து குவித்ததாக அறிந்தால் ஓ.பி.எஸ். பொது வாழ்க்கையில் இருந்து விலக தயாரா? நான் கட்சி நலனுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் பேசி வருகிறேன்.

என்னை மிரட்டி பார்க்கும் ஓ.பி.எஸ். குறித்த பல உண்மைகளை வெளியிட்டால் ஓ.பி.எஸ். வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News