தமிழ்நாடு

அனைத்து வணிகர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவோம்- விக்கிரமராஜா

Published On 2024-01-31 05:27 GMT   |   Update On 2024-01-31 05:27 GMT
  • வியாபாரிகளும் தரமான பொருட்களை வாங்கி விற்க வேண்டும்.
  • வணிகர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொடியேற்று விழா நடந்தது. நகரத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பாண்டுரங்கன், பொருளாளர் கனகராஜ், துணைத் தலைவர் ஜாகிர் உசேன், துணைச் செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவத் தலைவர் புருஷோத்தமன் வரவேற்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் சங்க கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கடைவீதி பகுதிக்கு மேள தாளங்கள் முழங்க நடை பயணமாக சென்று பேசினார்.

ஆன்லைன் வர்த்தகம் வணிகர்களை பெரிதும் பாதிக்கிறது. உணவு பாதுகாப்பு துறை வியாபாரிகளை மிரட்டினால் அவர்களை வீட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். வியாபாரிகளும் தரமான பொருட்களை வாங்கி விற்க வேண்டும். காய்கறிகளின் விலைகள் ஏறாமல் தடுக்க குளிர் பதனக்கிடங்குகளை அரசு அமைத்து, காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அரசே விலை நிர்ணயம் செய்து மக்களுக்கு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிகர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். வணிகர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News