தமிழ்நாடு

காங்கிரஸ் தலைவராக என்னை தேர்ந்தெடுக்க 101 சதவீதம் வாய்ப்பு உள்ளது- ப.சிதம்பரம் பேட்டி

Published On 2022-08-13 09:16 GMT   |   Update On 2022-08-13 10:28 GMT
  • ஒரே நாடு, ஒரே தேர்வு என்பது முற்றிலும் ஆபத்தானது.
  • இந்தியா பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியது.

காரைக்குடி:

முன்னாள் மத்திய நிதி மந்திரியும், ராஜ்யசபா உறுப்பினருமான ப.சிதம்பரம் இன்று காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரே நாடு, ஒரே தேர்வு என்பது முற்றிலும் ஆபத்தானது. அதை தொடக்கத்திலேயே கடுமையாக எதிர்க்க வேண்டும். இல்லை என்றால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பார்கள். இந்தியா பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியது.

நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. 18 முதல் 25 வயதுடையவர்கள் 25 சதவீதம் பேர் வேலை யில்லாமல் உள்ளனர். 5ஜி ஏலம் மூலம் 5 லட்சம் கோடி வரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1.56 லட்சம் கோடிதான் ஏலம் போய் உள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளது.

பா.ஜனதா அரசால் புதிய திட்டத்தை கொண்டுவர முடியாது. அவர்களால் இருக்கின்ற திட்டத்தை அழிக்கத்தான் முடியும்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும். அதில் தலைவராக என்னை தேர்ந்தெடுக்க 101 சதவீதம் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News