தமிழ்நாடு

பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published On 2023-10-22 05:41 GMT   |   Update On 2023-10-22 05:41 GMT
  • மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு இன்று காலையில் ஏற்றப்பட்டுள்ளது.
  • மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கரைக்கு திரும்பிட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம், வங்காள விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய இரண்டு கடல் பகுதிகளை கொண்டுள்ளது. இந்த நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதே போன்று தென் அரபிக்கடலில் தேஜ் புயல் உருவாகி உள்ளது.

இதனால் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு இன்று காலையில் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள வேண்டும்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கரைக்கு திரும்பிட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News