தமிழ்நாடு செய்திகள்

சூளகிரி அருகே மர்மநபர்கள் விட்டு சென்ற ஒட்டகங்கள்

Published On 2023-04-04 10:44 IST   |   Update On 2023-04-04 10:44:00 IST
  • கோபசந்திரம் பகுதியில் அந்த ஒட்டகங்களை கட்டி வைத்து உள்ளனர்.
  • ஒட்டகங்களை அதன் உரிமையாளர்கள் யாராக இருந்தாலும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கொண்டு செல்லலாம்.

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, ஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஒரம் கோபசந்திரம் பகுதியில் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட 5 ஒட்டகங்களை சிலர் ஓட்டி வந்து உள்ளனர்.

இந்நிலையில் கோபசந்திரம் பகுதியில் அந்த ஒட்டகங்களை கட்டி வைத்து உள்ளனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தும், சிலர் செல்பி எடுத்து சென்றனர்.

ஆனால் நீண்டநேரமாகியும் யாரும் அந்த ஒட்டகங்களை பிடித்து செல்லவராததால் இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து ஒட்டகங்களை மீட்டு வருவாய்துறையினரிடம் ஒப்படைத்தனர். நேற்று வரை அந்த ஒட்டகங்களை தேடி யாரும் வராததால், 5 ஒட்டகங்களையும் இன்று மாவட்ட காலநடை துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மர்ம நபர்கள் வெளிமாநிலங்களில் இருந்து 5 ஒட்டகங்களை சூளகிரி பகுதிக்கு பலி கொடுப்பதற்காக அல்லது சவாரி செய்வதற்காக என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த ஒட்டகங்களை அதன் உரிமையாளர்கள் யாராக இருந்தாலும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கொண்டு செல்லலாம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News