தமிழ்நாடு

ராயபுரத்தில் மாநகர பஸ் டிரைவரை தாக்கிய ஐ.டி. ஊழியர் கைது

Published On 2023-08-27 09:00 GMT   |   Update On 2023-08-27 09:01 GMT
  • வாலிபர் ஹெல்மெட்டால் டிரைவர் நந்தகுமாரை தாக்கினார்.
  • ராயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

ராயபுரம்:

திருவொற்றியூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி மாநகர பஸ்(எண்1) சென்று கொண்டிருந்தது. டிரைவராக திருவொற்றியூர்,கலைஞர் நகரை சேர்ந்த நந்தகுமார் இருந்தார்.

ராயபுரம்,எம்.எஸ். கோவில் அருகே பஸ்சின் முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் செல்போனில் பேசியபடி வழிவிடாமல் சென்றதாக தெரிகிறது. இதனை டிரைவர் நந்தகுமார் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஹெல்மெட்டால் டிரைவர் நந்தகுமாரை தாக்கினார்.

இதுகுறித்து ராயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தாக்கிய கொடுங்கையூர் ஆண்டாள் நகரை சேர்ந்த ஐ.டி.ஊழியரான ஜெகநாதனை(21) கைது செய்தனர்.

Tags:    

Similar News