தமிழ்நாடு

பொன்னேரி ரெயில் நிலையத்தில் பயணிகளை மிரட்டும் குரங்குகள்- பொதுமக்கள் அச்சம்

Published On 2023-04-04 06:24 GMT   |   Update On 2023-04-04 06:24 GMT
  • பொன்னேரி பகுதியில் குரங்குகள் தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.
  • பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகள் முழுவதையும் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

பொன்னேரி:

பொன்னேரி பகுதியில் குரங்குகள் தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. கூட்டம், கூட்டமாக குடியிருப்பு பகுதியில் ஹாயாக சுற்றி வருகின்றன.

வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை தின்று சென்று விடுகிறது. இதனை தடுக்க வரும் பொது மக்களையும் கடித்து மிரட்டுகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

இதேபோல் பொன்னேரி ரெயில் நிலையத்திலும் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை விடாமல் துரத்துகிறது.

அவர்கள் கொண்டு வரும் உணவு பொருட்கள் மற்றும் பழங்களை குரங்குகள் பறித்து சென்று விடுகின்றன. இதனால் பொன்னேரி ரெயில் நிலையத்துக்கு வரவே பயணயிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

திருவாயர்பாடி, வேண்பாக்கம் ரெயில் நிலையத்திலும் குரங்குகள் அட்டகாசம் இருப்பதாக பயணிகள் தெரிவித்து உள்ளனர். பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகள் முழுவதையும் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

Tags:    

Similar News