தமிழ்நாடு செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்- குடிபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 360 பேருக்கு ரூ.26 லட்சம் அபராதம்

Published On 2023-01-02 12:23 IST   |   Update On 2023-01-02 12:23:00 IST
  • மோட்டார் வாகன விதிகளை மீறியதாக மொத்தம் ரூ.26 லட்சத்து 28 ஆயிரம் வசூலிக்கப்பட்டன.
  • போலீசாரின் தீவிர நடவடிக்கையால் புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய விபத்து, உயிர் இழப்பு குறைந்துள்ளது.

சென்னை:

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின்போது சாலை விபத்து, உயிர் இழப்பை தவிர்க்க சென்னையில் முக்கிய இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

நகரம் முழுவதும் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து-உயிர் இழப்பில்லா கொண்டாட்டமாக புத்தாண்டு கொண்டாட்டம் இருக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில் 31-ந்தேதி மாலையில் இருந்து 1-ந்தேதி இரவு வரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களது இருசக்கர மற்றும் கார் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுபோதையில் சிக்கியவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி ரூ.25 லட்சத்து 20 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டன.

இது தவிர மோட்டார்சைக்கிளில் 3 பேர் பயணம் செய்து 62 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு தலா ரூ.1000-மும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 46 பேருக்கு தலா ரூ.1000-மும் அபராதம் விதிக்கப்பட்டன.

மோட்டார் வாகன விதிகளை மீறியதாக மொத்தம் ரூ.26 லட்சத்து 28 ஆயிரம் வசூலிக்கப்பட்டன. போலீசாரின் தீவிர நடவடிக்கையால் புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய விபத்து, உயிர் இழப்பு குறைந்துள்ளது.

இதையடுத்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், கூடுதல் கமிஷனர் கபில்குமார், சரட்கார், பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னையில் 360 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்றவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

கடந்த காலத்தை ஒப்பிடும் போது இந்த வருடம் ஒரே ஒரு உயிரிழப்பு நடந்துள்ளது. சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News