தமிழ்நாடு செய்திகள்

ரூ.2 ஆயிரத்து 753 கோடி மதிப்பில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்- அமைச்சர் தகவல்

Published On 2023-03-28 12:42 IST   |   Update On 2023-03-28 12:42:00 IST
  • தொழில் துறை 4.0 தரத்திற்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன் மிகு மையங்களாக மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் செயல்படுத்த உள்ளோம்.
  • 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் 2 ஆயிரத்து 753 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

சென்னை:

சட்டசபையில் கேள்வி நேரத்தில் வானூர் எம்.எல்.ஏ. சக்கரபாணி பேசும்போது, வானூர் ஒன்றியத்தில் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி தொடக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகள் ரூ.1000 பெறுவதால் இந்த ஆண்டில் 10 ஆயிரத்து 500 மாணவிகள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள்.

தொழில் துறை 4.0 தரத்திற்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன் மிகு மையங்களாக மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் செயல்படுத்த உள்ளோம். குறிப்பாக 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் 2 ஆயிரத்து 753 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News