14 கிலோ மீட்டர் நடைபயிற்சி மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது.
- பழங்குடியினர் காலனிக்கு சென்று மலைவாழ் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதிகளில்உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்துநலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று மாலை அந்தியூர் வந்தார். அங்கிருந்து தாமரைக்கரை சென்றார்.
ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து கொங்காடை காலனி மற்றும் பழங்குடியினர் காலனிக்கு சென்று மலைவாழ் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தாமரைக்கரை வனத்துறை பயணியர் விடுதியில் இரவில் தங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை 5 மணி அளவில் தாமரை கரையிலிருந்து ஈரெட்டி, எழுச்சிபாளையம் வரை 14 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர் தேவர் மாலை பகுதிக்கு சென்று அங்குள்ள துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். மேலும் பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு தாமரைக்கரை துணை சுகாதார நிலையம் உட்பட பர்கூர் மலை கிராமத்திற்கு என்று தனியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். 102 இலவச தாய் சேய் ஊர்தி சேவை, நடமாடும் மருத்துவக் குழு அதன் தொடர்ச்சியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் மருத்துவ நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து அந்தியூர் அரசு மருத்துவமனையினை ஆய்வு செய்தார்.