தமிழ்நாடு

சிறுமலையை சுற்றுலாத்தலமாக அறிவிக்க பரிசீலிக்கப்படும்- அமைச்சர் தகவல்

Published On 2023-04-18 05:51 GMT   |   Update On 2023-04-18 05:51 GMT
  • சிறுமலை பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க அரசு முன்வருமா என அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார்.
  • சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவையான அடிப்படை வசதிகள் சுற்றுலாத்துறை மூலமாக செய்யப்படும்.

சென்னை:

சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், நத்தம் தொகுதிக்கு உட்பட்ட சிறுமலை பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க அரசு முன்வருமா? என அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து சுற்றுலாத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் கூறியதாவது:-

சிறுமலை பகுதி மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய பகுதி எனவும், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவையான அடிப்படை வசதிகள் சுற்றுலாத்துறை மூலமாக செய்யப்படும்.

மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் மொத்த மதிப்பீடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஆராய்ந்து, வனத்துறையிடம் தடையில்லா சான்று பெற்று, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று வரும் காலங்களில் சிறுமலை பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News