தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 235 கனஅடியாக சரிவு

Published On 2023-06-22 09:04 IST   |   Update On 2023-06-22 09:04:00 IST
  • அணையிலிருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
  • அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

மேட்டூர்:

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

நேற்று விநாடிக்கு 328 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து விநாடிக்கு 235 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையிலிருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று 97.63 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 96.94 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து இதே நிலையில் நீடித்தால், மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News