கடும் குளிர் வாட்டி வதைக்கிறது- சென்னையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாநகர பேருந்து சேவையும் குறைக்கப்பட்டுள்ளது.
- சாலைகளில் குறைந்த அளவிலேயே நடமாட்டம் இருந்தது.
சென்னை:
மாண்டஸ் புயலால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு கடுமையான குளிர் வாட்டி எடுக்கிறது.
ஊட்டியில் இருப்பது போன்று வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடுமையான குளிர் நிலவுவதால் மக்கள் கம்பளி உடைகளை அணிந்து கொண்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாநகர பேருந்து சேவையும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் குறைந்த அளவிலேயே நடமாட்டம் இருந்தது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையோர டீ கடைகள் பல மூடிக்கிடந்ததை காண முடிந்தது. சில கடைகள் மட்டுமே திருந்திருந்தன. சாலையோரத்தில் காய்கறி, பூ வியாபாரத்தில் ஈடுபடும் பெண்களும், சிறு வியாபாரிகளும் கடைகளை திறக்காமல் வைத்திருந்தனர். இதனால் கடை வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.