- 2015 சென்னை பெரு வெள்ளத்தின் போது ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
- கோவை தெற்கு தொகுதியில் கமலை தோற்கடித்தவர் வானதி என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றம் வரவேண்டும். மாற்றத்தை கொண்டு வருவேன் என்ற கமலின் பேச்சில் ஏற்பட்ட மாற்றம் தான் இப்போது அரசியல் களத்தில் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. 2015 சென்னை பெரு வெள்ளத்தின் போது ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
ஆனால் இப்போது சென்னை தண்ணீரில் தத்தளிக்கும் போது அரசை விமர்சிக்கும் நேரமல்ல என்றும் இயற்கை பேரிடரில் மக்கள் தான் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்த கருத்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
இது பற்றி பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியதாவது:-
மாற்றத்தை கொண்டு வருகிறேன் என்று கட்சி தொடங்கியவர். பாவம் இப்போதும் ஏமாற்றம் வந்துவிட கூடாதே. எப்படியாவது ஒற்றை சீட்டாவது வேண்டுமே என்பதற்காக தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறார். வேறென்ன சொல்ல? என்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமலை தோற்கடித்தவர் வானதி என்பது குறிப்பிடத்தக்கது.