தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உண்டியலில் தேங்கிய மழைநீரால் ரூபாய் நோட்டுகள் சேதம்

Published On 2023-03-07 12:11 IST   |   Update On 2023-03-07 12:11:00 IST
  • கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
  • ழைகாலத்தில் தண்ணீர் செல்லாதவாறு கோவிலில் உண்டியல்களை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

காஞ்சிபுரம்:

பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் பஞ்ச பூத தலங்களில் மண் தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் காணிக்கையை செலுத்த உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இவை 3 மாதத்துக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

இந்தநிலையில் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. அப்போது 3 உண்டியல்களில் கடந்த வடகிழக்கு பருவ மழையின் போது மழைநீர் தேங்கியதால் அதில் இருந்த ரூபாய் நோட்டுகள் சேதம் அடைந்து இருந்தன.

பல ரூ.500 மற்றும் ரூ.100 ரூபாய் நோட்டுகள் முழுவதும் தண்ணீரில் நனைந்து நாசமாகி இருந்தன. இதனை அறிந்து பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர். மழைகாலத்தில் தண்ணீர் செல்லாதவாறு கோவிலில் உண்டியல்களை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News