தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

Published On 2022-07-09 06:33 GMT   |   Update On 2022-07-09 06:33 GMT
  • தொடுகாடு பகுதியில் 5½ ஏக்கர் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு.
  • எந்திரங்கள், இரும்பு தளவாட பொருட்கள் போன்றவற்றை பொக்லைன் மூலம் முழுவதுமாக அகற்றினார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளுரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு கிராமத்தில் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி வருவதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு புகார்கள் வந்தது.

அவரது உத்தரவின் பேரில் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில், மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தொடுகாடு கிராமத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தொடுகாடு பகுதியில் 5½ ஏக்கர் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி வந்ததை உறுதி செய்தனர்.

மேலும் அந்த இடத்தில் இருந்த இரும்பு தகடுகள், எந்திரங்கள், இரும்பு தளவாட பொருட்கள் போன்றவற்றை பொக்லைன் மூலம் முழுவதுமாக அகற்றினார்கள்.

மேலும் மீண்டும் இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என வருவாய்த்துறையினர் அறிவிப்பு பலகையும் அந்த இடத்தில் வைத்தனர். மீட்கப்பட்ட இந்த அரசின் சொத்து மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.

இனிமேலும் அரசு நிலத்தை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்தால் ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் எச்சரித்தார்.

Tags:    

Similar News