தமிழ்நாடு செய்திகள்

மணமக்களுக்கு மண் அடுப்பு, விறகு, வறட்டி ஆகியவற்றை பரிசாக அளித்த நண்பர்கள்.

கியாஸ் விலை உயர்வை கண்டித்து மணமக்களுக்கு மண் அடுப்பு- விறகு பரிசளித்த நண்பர்கள்

Published On 2023-03-09 09:26 IST   |   Update On 2023-03-09 09:26:00 IST
  • மணமகன் நயீமின் நண்பர்கள் மணமக்களுக்கு அளித்த பரிசு பொருட்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
  • கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் வகையில் மணமக்களுக்கு மண் அடுப்பு, சாணி வறட்டி, விறகு ஆகியவற்றை அலங்கரித்து அன்பளிப்பாக நண்பர்கள் அளித்தனர்.

கடலூர்:

கடலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி நயீம் என்ற மணமகனுக்கும், சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த முஸ்கான் என்ற எம்.பி.ஏ. பட்டதாரி மணமகளுக்கும் நேற்று திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.

இதில் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழச்சியில் மணமக்களுக்கு பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் மணமகன் நயீமின் நண்பர்கள் மணமக்களுக்கு அளித்த பரிசு பொருட்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் வகையில் மணமக்களுக்கு மண் அடுப்பு, சாணி வறட்டி, விறகு ஆகியவற்றை அலங்கரித்து அன்பளிப்பாக நண்பர்கள் அளித்தனர்.

நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க மேடையிலே அன்பளிப்பை திறந்து பார்த்த மணமக்கள் இந்த பாரம்பரிய பழமையான பொருட்களை கண்டு வியப்படைந்தனர்.

Tags:    

Similar News