தமிழ்நாடு

பிரம்ம தீர்த்த குளத்தில் இறந்து கிடக்கும் மீன்கள்.

திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

Published On 2023-06-19 05:57 GMT   |   Update On 2023-06-19 05:57 GMT
  • கோவில் மைய பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தகுளம் உள்ளது. கடும் வறட்சியிலும் இந்த குளத்தில் நீர் வற்றாது.
  • பிரம்ம தீர்த்த குளத்தில் இன்று காலை நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு பச்சை நிறத்திலான ஆடல் வடிவ நடராஜர் சிலை அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெறும். அப்போது நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த கோவில் மைய பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தகுளம் உள்ளது. கடும் வறட்சியிலும் இந்த குளத்தில் நீர் வற்றாது. இதன் காரணமாக குளத்தில் மீன்கள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரம்ம தீர்த்த குளத்தில் இன்று காலை நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர். மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News