தமிழ்நாடு செய்திகள்

தற்காலிக டிரைவர் ஓட்டி சென்ற அரசு பஸ் வெள்ள நீரில் சிக்கியது

Published On 2024-01-09 15:56 IST   |   Update On 2024-01-09 16:24:00 IST
  • பஸ்சில் இருந்த ஒரு சில பயணிகள் கைகளை கோர்த்து சங்கிலி போன்ற அமைப்பு ஏற்படுத்தி அங்கிருந்து வெளியேறினர்.
  • மூதாட்டி ஒருவர் அந்தப் பஸ்சிற்குள் சிக்கிக்கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டிவனம்:

விழுப்புரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அரசு பஸ் டிரைவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் இதனை தற்காலிக டிரைவர் மணி கண்டன் பஸ்சை ஓட்டி சென்றார். இந்த பஸ் திண்டிவனம் இந்திரா காந்தி பழைய பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக அங்குள்ள தரைப் பாலத்தை கடந்த பொழுது ஏரியில் திறக்கப்பட்ட உபரிநீர் அதிகரித்து சாலையில் ஓடியது. இதில் பஸ் பழுதாகி வெள்ளநீரில் சிக்கிக் கொண்டது.

பஸ்சில் இருந்த ஒரு சில பயணிகள் கைகளை கோர்த்து சங்கிலி போன்ற அமைப்பு ஏற்படுத்தி அங்கிருந்து வெளியேறினர். மூதாட்டி ஒருவர் அந்தப் பஸ்சிற்குள் சிக்கிக்கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

கிடங்கல் ஏரியில் நீர் அதிகரித்ததால் போலீசார் அப்பகுதியில் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். ஆனால் வேன் டிரைவர்கள் வாகனத்தை கழுவுவதற்காக தடுப்புகளை அகற்றியதாக கூறப்படுகிறது.

இதனை அறியாத பஸ் டிரைவர் தரைப்பாலத்தின் வழியே வந்ததாலும், நீர்வரத்து அதிகரிப்பாலும், பஸ் பழுதாகி நீரில் சிக்கிக் கொண்டது. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News