தமிழ்நாடு

தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டு பணிகள் அமைச்சர் புல்லட்டில் சென்று ஆய்வு

Published On 2023-12-17 03:59 GMT   |   Update On 2023-12-17 03:59 GMT
  • மாநாட்டில் 100 அடி உயர கொடி கம்பம், கார் பார்க்கிங் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
  • அமைச்சர் மேடை அமைக்கும் பணியினை பார்வையிட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தி.மு.க. மாநில இளைஞரணி இரண்டாவது மாநாடு வருகின்ற 24-ந் தேதி நடைபெறுகிறது. அதற்காக 100 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு பந்தல் அமைக்கும் பணி, உணவருந்தும் இடம், கட்சி நிர்வாகிகள் அமருமிடம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்குமிடம், மாநாட்டில் 100 அடி உயர கொடி கம்பம், கார் பார்க்கிங் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகள் நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்று வருகிறது.


தினமும் காலை மாலை இரு வேலையும் அமைச்சர் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியினை பார்வையிட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இந்த நிலையில் திடீரென அமைச்சர் புல்லட் வண்டியைதானே ஓட்டி சென்று பணிகளை சுற்றி பார்வையிட்டார் அவருடன் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்டச் துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

Tags:    

Similar News