தமிழ்நாடு செய்திகள்
வங்ககடலில் நிலைகொண்ட தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது
- தெற்கு வங்க கடலில் மத்திய பகுதி மற்றும் அதனையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறையாத காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைக்கொண்டு இருந்தது.
- வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
சென்னை:
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தெற்கு வங்க கடலில் மத்திய பகுதி மற்றும் அதனையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறையாத காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைக்கொண்டு இருந்தது.
இது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. மேற்கு, வடமேற்கு திசையில் இது நகர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் இலங்கை கடற்கரையை நெருங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.