தமிழ்நாடு

திருநெல்வேலி, ஓசூரில் கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Published On 2023-08-22 08:37 GMT   |   Update On 2023-08-22 08:37 GMT
  • கோ-ஆப்டெக்சின் விற்பனை நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
  • சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சாயச்சாலை கட்டிடங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை:

திருநெல்வேலியில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்சின் வணிக வளாகம், ஓசூரில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்சின் விற்பனை நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும் மதுரை மாவட்டம், தொட்டிய பட்டியில் 72 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவிலும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 84 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவிலும், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 72 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவிலும், என மொத்தம் 2 கோடியே 28 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மாவட்ட அளவிலான சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சாயச்சாலை கட்டிடங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News