தமிழ்நாடு

தியாகி குமரன் சிலைக்கு அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய காட்சி.


சட்டசபையை முடக்க வேண்டும்- அர்ஜூன் சம்பத் பேட்டி

Published On 2023-01-11 07:54 GMT   |   Update On 2023-01-11 07:54 GMT
  • தமிழக கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்தது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
  • கவர்னரை அவமதிப்பது என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே அவமதிப்பதாகும்.

திருப்பூர்:

சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 91-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி திருப்பூரில் உள்ள அவரது உருவசிலைக்கு இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்தது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. கவர்னர் அரசியல் சட்டப்படி உரையாற்றிய போது அவரை அவமதித்துள்ளனர். கவர்னரை அவமதிப்பது என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே அவமதிப்பதாகும்.

கவர்னர் உரையில் தி.மு.க. தனது கட்சிக் கொள்கையை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக எழுதியுள்ளது. கவர்னரை பொய் பேச வைக்க தி.மு.க. முயற்சித்துள்ளது.கவர்னர் அந்த பதவியின் மாண்பை பாதுகாத்து உள்ளார். கவர்னரை வைத்து கொண்டே கண்டன தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து உள்ளனர். அதனால் தான் கவர்னர் வெளியேறினார்.

அரசியல் சாசன சட்டப்படி சட்டசபையை முடக்கி வைக்க வேண்டும்.தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வதற்கு கவர்னர் முயற்சி எடுக்க வேண்டும். மேலும் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டியதற்கு இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News