தமிழ்நாடு

தமிழகத்தில் பெண் கல்வி 78 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பது திராவிட மாடல் அரசின் சாதனை- அப்பாவு

Published On 2023-06-17 08:30 GMT   |   Update On 2023-06-17 08:30 GMT
  • நான் முதல்வன் திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது.
  • புதிய கல்விக்கொள்கையால் தமிழகம் 200 ஆண்டுகள் பின் தங்கிவிடும்.

நாகர்கோவில்:

மாவட்ட அளவில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான நான் முதல்வன் திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்வளர்த்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரை தாங்கி நிற்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டம் வழங்கப்படவில்லை, இக்கல்லூரியில் படித்தவர்களுக்கு ஆளுநர் விரைவில் பட்டம் வழங்க வேண்டும்.

இந்திய அளவில் பெண் கல்வி 28 சதவீதம் இருக்கும் நிலையில், தமிழகம் 78 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து உள்ளது. இது தான் திராவிட மாடல் அரசின் சாதனை. புதிய கல்விக்கொள்கையால் தமிழகம் 200 ஆண்டுகள் பின் தங்கிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News