தமிழ்நாடு

திருப்பூர் மாவட்டத்தில் 24 டாஸ்மாக் கடைகள் மூடல்

Published On 2023-06-22 07:19 GMT   |   Update On 2023-06-22 07:19 GMT
  • பணியாற்றும் ஊழியர்கள் நிர்வாகத்தின் அறிவுரைப்படி வேறு கடைகளில் பணியமர்த்தப்படுவர்.
  • நடைமுறை மூடப்படும் கடைகளின் கணக்கு வழக்குகள் சரி பார்த்து முடிந்த பின் செயல்படுத்தப்படும் என டாஸ்மாக் மேலாளர் தெரிவித்தார்.

திருப்பூர்:

தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள பேருந்து நிலையங்கள், வழிபாட்டுதலங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கும் 500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் செயல்படாது என டாஸ்மாக நிர்வாகம் சார்பில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. திருப்பூர் மாநகரில் 18 டாஸ்மாக் கடைகள் உட்பட மாவட்டத்தில் 24 கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம், கொங்கு மெயின் ரோடு, ஊத்துக்குளி சாலை உட்பட மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 24 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்பட்டன. நேற்று இரவுடன் இந்த கடைகளில் மது விற்பனை முடிவுக்கு வந்தது. கடையில் உள்ள மீதமுள்ள இருப்பு சரக்குகள் இன்று கணக்கு சரி பார்க்கப்பட்டு, மாவட்ட 'டாஸ்மாக்' கிடங்குக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

பணியாற்றும் ஊழியர்கள் நிர்வாகத்தின் அறிவுரைப்படி வேறு கடைகளில் பணியமர்த்தப்படுவர். இந்த நடைமுறை மூடப்படும் கடைகளின் கணக்கு வழக்குகள் சரி பார்த்து முடிந்த பின் செயல்படுத்தப்படும் என டாஸ்மாக் மேலாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News