தொழிற்சாலையில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.
கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் 'திடீர்' தீ விபத்து
- பணியாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
- தீ விபத்து சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியில் சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான காவியா தீப்பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இன்று காலையில் வழக்கம் போல் தொழிற்சாலையை திறப்பதற்காக அதன் ஊழியர் ஒருவர் அங்கு சென்றார்.
தொழிற்சாலையை திறந்து உள்ளே சென்றபோது தீக்குச்சிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் மின் கசிவு காரணமாக தீப்பொறி நெருப்பும், புகையும் மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியது தெரியவந்தது. இதனால் அப்பகுதியே புகை மூட்டமானது.
தகவலறிந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்தில் உள்ளே இருந்த தீக்குச்சிகள் மற்றும் தீக்குச்சிகள் அடைக்கும் பெட்டிகள் எந்திரங்கள், மின் சாதன பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது.
பணியாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.