தமிழ்நாடு

வேலூர் தனியார் மருத்துவ கல்லூரியில் ராக்கிங்- ஆந்திர, தமிழக மாணவர்கள் 7 பேர் மீது வழக்கு

Published On 2022-11-11 05:20 GMT   |   Update On 2022-11-11 05:20 GMT
  • தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர் சார்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
  • பாகாயம் போலீசார் மாணவர்கள் 7 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

வேலூர்:

வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்தனர்.

முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி டவுசருடன் விடுதி வளாகத்தில் ஓட விட்டுள்ளனர்.

குட்டிக்கரணம், தண்டால் எடுப்பது, மாணவர்கள் கட்டி பிடித்து முத்தம் கொடுக்க செய்து ராக்கிங் கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. மேலும் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு புகார் கடிதம் வந்தது. இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர் சார்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக பாகாயம் போலீசார் மாணவர்கள் 7 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

வேலூர் தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்ததாக மாணவர்கள் 7 பேர் மீது 2 பிரிவுகளில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

7 பேரும் ஆந்திரா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

Tags:    

Similar News