தமிழ்நாடு செய்திகள்

பஸ் நிறுத்தத்தில் பிளஸ்-2 மாணவன் குத்திக்கொலை: தற்காலிக மின்ஊழியர் வெறிச்செயல்

Published On 2023-10-03 11:08 IST   |   Update On 2023-10-03 13:48:00 IST
  • ஜீவா பள்ளி செல்வதற்காக மேல்புளியங்குடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
  • கொலையாளி ஆனந்த் பி.இ. பட்டதாரியாவார். அவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா (வயது 17). இவர் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர் இன்று காலை பள்ளி செல்வதற்காக மேல்புளியங்குடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண் டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆனந்த் அங்கு வந்தார்.

அவர் திடீரென மாணவன் ஜீவாவை தனியாக பேசவேண்டும் என அங்குள்ள அழைத்து சென்றார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜீவாவை குத்தினார். அவருக்கு 8 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த ஜீவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளி ஆனந்த் பி.இ. பட்டதாரியாவார். அவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வருகிறார். ஜீவா கொலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் போலீசார் அதனை உறுதி செய்யவில்லை. ஜீவா மற்றும் ஆனந்த் குடும்பதினரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் கொலை நடந்தபோது ஜீவாவின் நண்பர் பிரவீன் அங்கிருந்ததாக கூறப்படுகிறது. அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளி ஆனந்த் பிடிபட்டால்தான் கொலைக்கான முழு காரணம் தெரியவரும்.

பிளஸ்-2 மாணவன் பட்டப்பகலில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News