தமிழ்நாடு

கரடி சேதப்படுத்திய வீடு.

வீட்டிற்குள் புகுந்து சமையல் எண்ணெயை ருசித்த கரடி... கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை

Published On 2024-01-27 05:19 GMT   |   Update On 2024-01-27 05:36 GMT
  • சமையலறையில் இருந்த நல்லெண்ணெயை ருசித்த குடித்துவிட்டு, அங்குள்ள பொருட்களை சூறையாடி சேதப்படுத்தியது.
  • எங்கள் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து உலாவரும் கரடி தொடர்பாக நாங்கள் ஏற்கனவே வனத்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளோம்.

கோத்தகிரி:

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது.

அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலைஅடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் கோத்தகிரி அடுத்த ஜக்கலோடை கிராமத்துக்கு சம்பவத்தன்று நள்ளிரவு ஒரு கரடி வந்தது.

அங்குள்ள வீடுகளில் உணவு கிடைக்குமா? என தேடி அலைந்து திரிந்தது. அப்போது மாசிஅம்மாள் என்பவரின் வீட்டின் முன்பு நின்ற கரடி திடீரென கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தது.

பின்னர் சமையலறையில் இருந்த நல்லெண்ணெயை ருசித்த குடித்துவிட்டு, அங்குள்ள பொருட்களை சூறையாடி சேதப்படுத்தியது.

பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த கரடி அதிகாலை நேரத்தில் மீண்டும் வந்த வழியாக காட்டுக்குள் புறப்பட்டு சென்றது.

அடுத்த நாள் காலையில் பொதுமக்கள் எழுந்து வந்து பார்த்தபோது மாசியம்மாள் வீட்டின் கதவை உடைத்து கரடி அட்டகாசம் செய்த விவரம் தெரியவந்தது. சம்பவத்தன்று மாசிஅம்மாள் வீட்டில் இல்லாததால், அவருக்கு அதிர்ஷ்டவசமாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

எங்கள் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து உலாவரும் கரடி தொடர்பாக நாங்கள் ஏற்கனவே வனத்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். இருப்பினும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கிராம மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

Similar News