தமிழ்நாடு

அவதூறாக பேசி மிரட்டியதால் முதியவரை கொன்ற தொழிலாளி- போலீசார் விசாரணையில் தகவல்

Published On 2023-07-26 06:10 GMT   |   Update On 2023-07-26 06:10 GMT
  • கொலை தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
  • கடந்த சில மாதங்களாகவே குடித்துவிட்டு ஒருமையில் பேசி, தனக்கு தேவையானவைகளை கடைகளில் வாங்கி வர சொல்லியும் மிரட்டினான்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூலாங்கிணரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 77). இவர் கடந்த 12-ந் தேதி உடுமலை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் முக்கோணம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தின் முன்பு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இந்த கொலை தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சுப்பிரமணியத்தை கொலை செய்ததாக பூலாங்கிணர் பகுதியை சேர்ந்த தாமோதரன் (65) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான தாமோதரன் போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

நானும் சுப்பிரமணியமும், சில வருடங்களுக்கு முன்பு உடுமலையில் உள்ள தனியார் மில்லில் ஒன்றாக வேலை செய்தோம். அப்போது சுப்பிரமணியம் என்னை நல்ல முறையில் மரியாதையாக பேசி வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாகவே குடித்துவிட்டு ஒருமையில் பேசி, தனக்கு தேவையானவைகளை கடைகளில் வாங்கி வர சொல்லியும் மிரட்டினான்.

இதனால் கோபமடைந்த நான் சுப்பிரமணியத்தை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். சம்பவத்தன்று இரவு சுப்பிரமணியம் முக்கோணத்தில் உள்ள ஒரு ஓட்டலின் முன்பு அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அருகே இருந்த கல்லை எடுத்து அவர் தலை மீது போட்டு கொலை செய்தேன் என்றார்.

கைதான தாமோதரனை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News