தமிழ்நாடு செய்திகள்

வருகிற 29-ந் தேதி முதல் கோவையில் இருந்து கோவாவுக்கு புதிய விமான சேவை

Published On 2023-03-12 11:07 IST   |   Update On 2023-03-12 11:07:00 IST
  • வடக்கு கோவாவில் மோபா என்ற இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் கோவையில் இருந்து வடக்கு கோவா, மோபா பகுதிக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.

கோவை:

கோவையில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் புதிய விமான சேவை வருகிற 29-ந் தேதி முதல் தொடங்குகிறது.

கோவா மாநிலத்தை பொறுத்தவரை பெரும்பாலான விமானங்கள் தெற்கு கோவாவில் அமைந்துள்ள பனாஜி விமான நிலையத்திற்கே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வடக்கு கோவாவில் மோபா என்ற இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் கோவையில் இருந்து வடக்கு கோவா, மோபா பகுதிக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.

வாரத்தில் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பகல் 1.10 மணிக்கு விமானம் புறப்பட்டு பகல் 2.30 மணிக்கு விமானம் புறப்படுகிறது.

அதேபோல மோபாவில் இருந்து புறப்பட்டு பகல் 2.30 மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைகிறது.

அத்துடன் புதன்கிழமைகளில் மாலை 6.40 மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படும். மோபாவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கோவை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகிறது.

Tags:    

Similar News