தமிழ்நாடு செய்திகள்

அரசு பள்ளிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு

Published On 2024-10-10 11:00 IST   |   Update On 2024-10-10 11:00:00 IST
  • பள்ளி மாணவிகளுடன் பள்ளி நடைமுறை பற்றி அமைச்சர் கலந்துரையாடினார்.
  • முதலமைச்சர் காலை உணவு திட்டப் பணியாளர்களுடன் உரையாடி, உணவின் தரத்தையும் ஆய்வுசெய்தார்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர், ஜி.கே.மணி ஆகியோர் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட குள்ளனூர் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு திறன்மிகு வகுப்பறைகளையும் பார்வையிட்டனர்.

அப்போது பள்ளி மாணவிகளுடன் பள்ளி நடைமுறை பற்றி அமைச்சர் கலந்துரையாடினார்.

தொடர்ந்து முதலமைச்சர் காலை உணவு தயாராவதில் தாமதம் என்பதை அறிந்து அது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

அப்போது அந்த பள்ளியில் மின்சார நீர் ஏற்றும் மோட்டாரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் கசிந்துள்ளது.

இதனை அறிந்த ஆசிரியர்களும், பணியாளர்களும் காலையில் அதனை பழுது பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

பழுது பார்த்து கொண்டிருந்த பணியாளர்களிடம் 'இனிமேல் இது போன்ற மின் கசிவு ஏற்படாத வகையில் சீரமைக்குமாறு அமைச்சர் கேட்டு கொண்டார்.

தொடர்ந்து முதலமைச்சர் காலை உணவு திட்டப் பணியாளர்களுடன் உரையாடி, உணவின் தரத்தையும் ஆய்வுசெய்தார். பின்னர் அமைச்சர் அங்கிருந்து வேறு ஒரு அரசு பள்ளியை ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றுவிட்டார்.

Tags:    

Similar News