தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1474 கன அடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 103.72 அடியாக உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 1304 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 1474 கன அடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து காவிரியில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் அப்படியே நீடிக்கிறது.
நேற்று 103.71 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 103.72 அடியாக உள்ளது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித்தால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது.