தமிழ்நாடு செய்திகள்

மீனவர்கள் வலையில் சிக்கிய மருத்துவ குணமுள்ள சங்கு மீன்

Published On 2023-06-24 12:18 IST   |   Update On 2023-06-24 12:18:00 IST
  • ஒரு சங்கு சதை மீன் 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
  • அதிக மருத்துவ குணம் வாய்ந்ததாக கூறப்படும் இந்த மீன்களை விபரம் அறிந்தவர்கள் அதிகமாக வாங்கிச் சென்றனர்.

பட்டினப்பாக்கம்:

மீனவர்கள் வலையில் சிக்கிய, அதிக மருத்துவ குணம் கொண்ட சங்கு சதை மீன்கள், தலா 400 ரூபாய்க்கு விற்கப்பட்டன. சென்னையில் மீன்பிடி தடைக்காலம் சமீபத்தில் முடிந்து, மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.

சங்கரா, வஞ்சிரம், சுறா, மத்தி, கவலை உள்ளிட்ட பலவகை மீன்கள் எளிதில் கிடைக்கும் நிலையில், சங்கு சதை மீன்கள் கிடைப்பது மிகவும் அரிது. இந்நிலையில் பட்டினப்பாக்கம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில், சங்கு சதை மீன்கள் சிக்கியுள்ளன. இந்த மீன்கள் பட்டினப்பாக்கம் மீன் கடைகளில் விற்பனைக்கு வந்தன. அதிக மருத்துவ குணம் வாய்ந்ததாக கூறப்படும் இந்த மீன்களை விபரம் அறிந்தவர்கள் அதிகமாக வாங்கிச் சென்றனர். ஒரு சங்கு சதை மீன் 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது:-

கடல் அலைக்கு ஏற்றாற் போல் தான், இந்த சங்கு சதை மீன்கள் வரும். சாதாரணமாக இந்த மீன்கள் வலையில் சிக்காது. இதில், விஷ சங்கு சதை மீன்களும் உள்ளன. அவற்றை பிடிக்கமாட்டோம்.

மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய் கலந்து இந்த மீனை சமைத்து, சங்கு கறி என சில ஓட்டல்களில் விற்கப்படுகிறது. இதன் மருத்துவ குணம் அறிந்தவர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News