தமிழ்நாடு

767 எம்.பி.பி.எஸ். உள்பட 1670 இடங்களுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு தொடங்கியது

Published On 2023-08-21 09:32 GMT   |   Update On 2023-08-21 09:32 GMT
  • 24-ந்தேதி காலை 10 மணி முதல் 28-ந்தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • செப்டம்பர் 1-ந்தேதி முதல் 4-ந்தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

சென்னை:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு இடங்கள் மற்றும் நிர்வாக இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்து உள்ளது.

முதல் சுற்று கலந்தாய்வுக்கு பிறகு அரசு ஒதுக்கீட்டில் 119 எம்.பி.பி.எஸ்., 85 பி.டி.எஸ். இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 648 எம்.பி.பி.எஸ்., 767 பி.டி.எஸ். இடங்களும் காலியாக உள்ளன. மொத்தம் 1670 மருத்துவ இடங்கள் இருக்கின்றன.

அந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வுக்கு தகுதியானவர்கள் இன்றும் நாளையும் இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டும். நாளை மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

24-ந்தேதி காலை 10 மணி முதல் 28-ந்தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்ய வேண்டும். வருகிற 29, 30-ந்தேதிகளில் தர வரிசைப்பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தொடர்ந்து வரும் 31-ந் தேதி இடங்கள் குறித்த விண்ணப்பங்கள் இணைய தளத்தில் வெளியிடப்படும்.

செப்டம்பர் 1-ந்தேதி முதல் 4-ந்தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். செப்டம்பர் 4-ந்தேதி மாலை 5 மணிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்று மருத்துவ கல்வி தேர்வுக்குழும செயலர் டாக்டர் முத்துசெல்வன் தெரிவித்தார்.

Tags:    

Similar News