தஞ்சமடைந்த காதல் ஜோடி.
ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
- காதலர்கள் 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறி ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
- இருவரது பெற்றோரையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள பலக்கனூத்தை சேர்ந்த முத்துபாண்டி மகன் சதீஸ்பாண்டி(23). இவரது வீட்டிற்கு அருகே திண்டிவனத்தை சேர்ந்த செல்வன் மகள் மாலினி(22) என்பவர் தனது பாட்டி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. இதுகுறித்த விஷயம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே அவர்கள் காதலை கண்டித்தனர். மேலும் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கவும் தொடங்கினர். இதனால் காதலர்கள் 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறி ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
தாங்கள் சேர்ந்து வாழ்ந்தால் இருவீட்டாரும் பிரச்சினை செய்வார்கள் என பயந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரி ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இருவீட்டாரிடமும் எழுதி வாங்கி கொண்டனர்.
இதனைதொடர்ந்து காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.