தமிழ்நாடு

சென்னை துறைமுகத்தில் மதுபாட்டில் கடத்திய லாரி டிரைவர் கைது

Update: 2022-10-07 07:17 GMT
  • சென்னை துறைமுகத்தில் இருந்து பொருட்களை இறக்கிவிட்டு வெளியே வந்த லாரியில் தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
  • லாரி டிரைவர் பரந்தாமனை சென்னை துறைமுக பொறுப்பு கழக போலீசார் கைது செய்து செய்தனர்.

ராயபுரம்:

சென்னை துறைமுகத்துக்கு ஏற்றுமதி, இறக்குமதிக்காக வரும் சரக்கு கப்பல்களில் இருந்து வெளிநாட்டு மதுபானங்களை வாங்கி கண்டெய்னர் லாரிகள் மூலம் வெளியில் கடத்தப்பட்டு கள்ளச்சந்தைகளில் விற்பனை நடைபெறுவதாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் துறைமுகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் சென்னை துறைமுகத்தில் இருந்து பொருட்களை இறக்கிவிட்டு வெளியே வந்த லாரியில் தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மது பாட்டில்கள் கடத்தி செல்வது தெரிந்தது.

இதையடுத்து லாரி டிரைவர் பரந்தாமனை சென்னை துறைமுக பொறுப்பு கழக போலீசார் கைது செய்து செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News