தமிழ்நாடு

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் தற்காலிக நீரூற்றின் அருகில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள்.


கொடைக்கானல் நட்சத்திர ஏரியில்படகு சவாரி செய்து பொழுதை கழிக்கும் சுற்றுலா பயணிகள்

Published On 2024-04-16 06:04 GMT   |   Update On 2024-04-16 06:04 GMT
  • நட்சத்திர ஏரியில் படகு சவாரி.
  • பொழுதை கழிக்கும் சுற்றுலா பயணிகள்.

கொடைக்கானல்:

கொடைக்கானலுக்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை வெயில் காரணமாகவும், பள்ளி, கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் முக்கிய பொழுதுபோக்கு இடமாக நட்சத்திர ஏரியை தேர்வு செய்து அங்கு ஆனந்தமாக படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

கொடைக்கானலில் நகர் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி ஏரியைச்சுற்றி ஒரு சில இடங்களில் உள்ளது.இதில் தமிழ்நாடு அரசு இல்ல படகு குழாம், நகராட்சி படகுக்குழாம் என இரு வேறு படகுக் குழாம்கள் இயங்கி வருகிறது. இதில் கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியை ஒட்டிய ஏரிப்பகுதியில் ஒரு நகராட்சி படகு குழாம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாகவும் நட்சத்திர ஏரிக்குள் சென்று படகில் ஏறி சவாரி செய்யும் விதமாகவும் அனைவரையும் ஈர்க்கும் விதமாக மிதவை நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ஓய்வறை, பாதுகாப்பான நடைமேடை, சுற்றுலா பயணிகள் நெரிசல் இல்லாமல் உள்ளே செல்லும் வகையில் வழித்தடங்கள் என சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஏரிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் நடைமேடையில் சுற்றுலா பயணிகள் அச்சமின்றி நடக்கும் விதமாக தார்பாய்கள் அமைத்து பயணிகள் பாதுகாப்பை நகராட்சி உறுதிப்படுத்தியுள்ளது. நடைமேடையில் பயணித்து நட்சத்திர ஏரியினுள் குறுகிய தூரம் வரை சென்று படகில் ஏறி சவாரி செய்வது மிகுந்த உற்சாகத்தை தருவதாக சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News