தமிழ்நாடு

ஊத்தங்கரையில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு

Published On 2023-07-05 09:12 GMT   |   Update On 2023-07-05 09:13 GMT
  • ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில், 100 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்தில் உலா வருகிறது.
  • கள்ளநோட்டு புழக்கம் கள்ளநோட்டு பற்றி அறியாத பாமர மக்களிடம், அதிக அளவில் உலா வருகிறது.

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில், 100 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்தில் உலா வருகிறது.

குறிப்பாக சிறு வியாபாரிகள், காய்கறி விற்பனையாளர்கள், கூலி தொழில் செய்யும் நபர்கள், செங்கல்சூளைகளுக்கு வேலைக்கு செல்லும் ஆட்கள் போன்ற நபர்களுக்கு, தெரியாமல் அவர்கள் கையில் கள்ளநோட்டுகள் வந்து விடுகிறது.

இதனை அறியாத பாமர மக்களில் ஒருவர், நேற்று ஊத்தங்கரை, திருவண்ணாமலை சாலையில் உள்ள அரசு மதுபான கடையில், மதுபானம் வாங்க பணம் கொடுத்துள்ளார்.

அதில் 100 ரூபாய் நோட்டு கள்ளநோட்டாக இருந்ததை கண்ட மதுக்கடை பணியாளர், உடனடியாக நோட்டின் மீது பேனாவில் கள்ளநோட்டு என எழுத்தால் எழுதி அவரிடமே ஒப்படைத்தார்.

கள்ளநோட்டு பற்றி அறியாத அந்த நபர் செங்கல்சூளையில் கூலி வேலை செய்துகொண்டு வந்த பணம் கள்ள நோட்டு என கூறியதால், மிகவும் மன வருத்தத்துடன் திரும்பி சென்றார்.

இதுபோன்ற கள்ளநோட்டு புழக்கம், ஊத்தங்கரை பகுதியில், கள்ளநோட்டு பற்றி அறியாத பாமர மக்களிடம், அதிக அளவில் உலா வருகிறது.

இதனால் கூலி தொழிலாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், உரிய நடவடிக்கை எடுத்து கள்ளநோட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News