தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவி (கோப்பு படம்)

இந்தியாவின் பலமாக இருந்த பன்முக கலாச்சாரம், பலவீனமாக மாறியது- ஆளுநர் ஆர்.என்.ரவி

Published On 2022-12-30 18:48 GMT   |   Update On 2022-12-31 01:24 GMT
  • தமிழகம் ஆயிரம் ஆண்டுகளாக முன்பே இலக்கிய வளத்துடன் திகழ்ந்தது.
  • அழிவிலிருந்து நமது கலாச்சாரம், கலைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

சென்னையில் ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி அமைப்பின் சார்பில் சங்கீதத் திருவிழாவை தொடங்கி வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

பாரதம் ஒரே குடும்பமாக பார்க்கப்பட்டது. இந்திய மரபுகள் மற்றும் கலாச்சாரம் அதன் அடையாளமாக வரையறுக்கப்படுகிறது. தமிழகம் ஆயிரம் ஆண்டுகளாக முன்பே இலக்கிய வளத்துடன் திகழ்ந்தது. இங்கு வேதங்கள், உபநிடதங்கள், திருக்குறள், நாலாயிர திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட பல இலக்கியப் படைப்புகள், இன்றைய இளம் தலைமுறையினருக்கு அதன் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்ல பயன்படுகின்றன.

இந்திய கலாச்சாரம் ஆன்மீகம் மற்றும் சனாதனத்துடன் வேரூன்றியுள்ளது. பன்முக கலாச்சாரம், சாதி, மதம், மொழி, உணவு வகைகள் போன்றவை இந்தியாவின் அழகும் வலிமையும் ஆகும். ஆனால் துரதிஷ்டவசமாக அது பலவீனமாக மாறியது. சுதந்திரத்திற்கு பிறகு மக்கள் காலனித்துவ மனநிலையுடன் இருந்தனர், மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறினர். அன்னிய படையெடுப்பாளர்களால் நமது கலாச்சாரம் மேலும் சேதம் அடைந்தது. அழிவிலிருந்து நமது கலாச்சாரம் மற்றும் கலைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News