தமிழ்நாடு செய்திகள்

ஆளுநர் வேண்டுமென்றே தமிழக அரசை எதிர்க்க கூடாது: அன்புமணி பேட்டி

Published On 2023-10-24 10:47 IST   |   Update On 2023-10-24 10:47:00 IST
  • தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும்.
  • 2024 பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம்.

சிவகாசி:

சிவகாசியில் பா.ம.க. தலைவர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு கடைகளில அதிகாரிகள் கையூட்டு பெற்று கொண்டு ஆய்வு நடத்துவதில்லை. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தின ஊதியம் 500 ரூபாய் கொடுக்க வேண்டும்.

பட்டாசு விபத்துகளை தடுக்க ஊழல் செய்யாத அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். முதல்-அமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என கூறுவது தவறான கருத்து. உச்ச நீதிமன்றம் 2012 சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில சுயாட்சி என கூறும் தி.மு.க. ஏன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குகிறது. இனி சமூக நீதி பற்றி தி.மு.க. பேச கூடாது.

நீட் குறித்து ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்தில் ரத்து செய்வோம் என கூறினார்கள். தற்போது இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு கையெழுத்து இயக்கம் தி.மு.க. நடத்துகிறது. நீட் தேர்வால் எந்த பயனும் இல்லை.

2024 பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம். ஆளுநர் என்பவர் நடுநிலையாக செயல்பட வேண்டும். அரசை வேண்டுமென்றே எதிர்த்து செயல்படக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில பொருளாளர் திலகபாமா மற்றும் மத்திய மாவட்டச் செயலாளர் டேனியல் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News