தமிழ்நாடு

தமிழக அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்- ஜி.கே.வாசன்

Published On 2022-09-27 08:35 GMT   |   Update On 2022-09-27 08:35 GMT
  • தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வெடிப்பு புதிய மாடலாக உருவெடுத்துள்ளது.
  • காவல்துறையின் தாமதமான நடவடிக்கையினால், அனைத்து தரப்பு மக்களும் அரசின் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர்.

சென்னை:

தமிழர் தந்தை என்று அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள ஆதித்தனார் திருவுருவச்சிலைக்கும், அதன் கீழ் அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், நிருபர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:-

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வெடிப்பு புதிய மாடலாக உருவெடுத்துள்ளது. காவல்துறையின் தாமதமான நடவடிக்கையினால், அனைத்து தரப்பு மக்களும் அரசின் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர்.

இந்நிலையில், மழையின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராகும் நெல்மணிகள் நிலத்தில் சாய்ந்து உள்ள நிலையில் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்.

எனவே விவசாயிகளுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற சங்கடமான நேரங்களில் விவசாயிகளின் துயர்துடைக்க அரசு முன் வரவேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

Tags:    

Similar News