தமிழ்நாடு செய்திகள்

7 மாத கர்ப்பத்தால் விஷம் குடித்த சிறுமி- காதலன் கைது

Published On 2022-09-19 10:47 IST   |   Update On 2022-09-19 10:47:00 IST
  • சிறுமியும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கூலி தொழிலாளி கோகுலகிருஷ்ணன் என்பவரும் காதலித்து வந்து உள்ளனர்.
  • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய கோகுலகிருஷ்ணனை கைது செய்தனர்.

கோவை:

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் தான் விஷம் குடித்த விவரத்தை அவரது தாயாரிடம் தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து டாக்டர்கள் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

அதில் சிறுமியும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கூலி தொழிலாளி கோகுலகிருஷ்ணன் (22) என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர்.

அப்போது கோகுலகிருஷ்ணன் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் சிறுமியை அழைத்து சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி 7 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார். இது ஆரம்பத்தில் சிறுமிக்கு தெரியவில்லை. நாளடைவில் தெரிய வந்ததும் சிறுமி பயத்தில் இருந்து வந்துள்ளார்.

இதனால் சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வடவள்ளி போலீசார் பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய கோகுலகிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News