தமிழ்நாடு

குன்றத்தூரில் கஞ்சா விற்பனை: குறும்பட இயக்குனர் உள்பட 3 பேர் கைது

Published On 2023-09-03 07:21 GMT   |   Update On 2023-09-03 07:21 GMT
  • ஆகாஷ் கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வந்ததும், சஞ்சய் குறும்படங்களை இயக்கியிருப்பதும் தெரிந்தது.
  • குன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யவும், கஞ்சாவை புகைக்கவும் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது.

பூந்தமல்லி:

குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சந்துரு, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாயபாரத் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஆகாஷ்(24), சஞ்சீவ்(25), சஞ்சய்(24), என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் ஆகாஷ் கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வந்ததும், சஞ்சய் குறும்படங்களை இயக்கியிருப்பதும் தெரிந்தது. நண்பர்களான 3 பேரும் கல்லூரியில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அதிகம் பணம் சம்பாதிக்கும் ஆசையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர். குன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யவும், கஞ்சாவை புகைக்கவும் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது.

அவர்கள் வடமாநிலங்களில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து இந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் விற்பனை செய்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனையில் அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News